குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
முப்பெரும் தீய சக்திகளில் ஒன்றாக துருக்கி திகழ்கின்றது என சவூதி அரேபியாவின் இளவரசர் முகம்மது பின் சல்மான் ((Mohammed bin Salman) ) குற்றம் சுமத்தியுள்ளார். ஈரான், கடும்போக்குடைய இஸ்லாமிய தீவிரவாதிகள் மற்றும் துருக்கி ஆகியன முப்பெரும் தீய சக்திகளாக திகழ்கின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார். எகிப்திற்கு மேற்கொண்ட பயணத்தின் போது அந்நாட்டு ஊடகங்களிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கட்டாருடனான பகைமை நீண்ட காலம் நீடிக்கக்கூடும் எனவும், அதனால் சவூதி அரேபியாவிற்கு பாதிப்பு எதுவும் கிடையாது எனவும் தெரிவித்துள்ளார். இந்த மாத இறுதியில் சவூதியில் நடைபெற்ற அரேபிய மாநாட்டில் கட்டார் பங்கேற்பதனை தடுக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.