166
தக்ஸ் ஆஃப் ஹந்தோஸ்தான் எனும் திரைப்படத்தில் நடித்து வரும் அமிதாப் இரவு பகலாக தூக்கம் மற்றும் ஓய்வின்றி தொடர்ந்து படப்பிடிப்பில் ஈடுபட்டதால் உடலில் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஜோத்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். அத்துடன் மும்பையில் இருந்து அழைக்கப்பட்ட சிறப்பு மருத்துவர்களும் அமிதாப்புக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் இமயமலை செல்வதற்காக வட இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள தமிழக நடிகர் ரஜினிகாந்த், உத்ரகாண்ட் மாநிலம் டேராடூனில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தனது நண்பரும், நடிகருமான அமிதாப் பச்சன் விரைவில் குணமடைய இறைவனிடம் தான் பிரார்த்திப்பதாக கூறினார்.
Spread the love