ஒருகாலத்தில் தமிழில் முன்னணி நடிகையாக இருந்த சுகன்யா நடிப்புக்கு இடைவேளை விட்டது ஏன் என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார். தான் சிறந்த நாட்டிய கலைஞராக வரவே ஆசைப்பட்ட போதும் புது நெல்லு புது நாத்து படம் மூலம் நடிகையாகி விட்டதாக தெரிவித்துள்ள அவர் முதல் படத்தில் தான், நெப்போலியன் உள்பட 8 பேர் புதுமுகங்கள் எனவும் அறிமுகமான முதல் படத்திலேயே 9 விருதுகள் தனக்கு கிடைத்தது எனவும் தெரிவித்துள்ளார்.
அதன்பின்னர் தான் நடித்த சின்னக்கவுண்டர் உள்பட பல படங்கள் தனக்கு பெயர் சொல்லும் படங்களாக அமைந்தன எனவும் கால்ஷீட் கொடுக்க முடியாத அளவுக்கு சினிமாவில் ‘பிசி’யாக இருந்தேன் எனவும் தனது சினிமா வாழ்க்கையின் அது ஒரு பொற்காலம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இப்போது வாரந்தோறும் புதிய தமிழ் படங்கள வருவதாகவும் சில படங்கள் நல்ல கதை அம்சத்துடன் வருகின்றன எனத் தெரிவித்துள்ள அவர் தொழில் நுட்பங்கள் அதிகமாக வளர்ச்சி அடைந்துள்ளன எனவும் கருத்து சுதந்திரம் எங்கும் பரவலாகி காணப்படுவதனை கவனித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
நடிகர்கள் அரசியலுக்கு வருவது தற்போது பெரும் பேச்சாக உள்ளது எனவும் அதுபற்றி பதில் சொல்ல விரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்
தெலுங்கில் அண்மையில் நடித்த படம் மூலம் தனக்கு நல்ல பெயர் கிடைத்திருக்கிறது எனவும் விரைவில் சேரன் படத்தில் நடிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
நிறைய படங்களில் நடிப்பதைவிட நல்ல படங்களில் அழுத்தமான வேடத்தில் நடிக்க விரும்புவதனால் ; நடிப்பில் இடைவெளி ஏற்பட்டிருக்கிறது எனவும் மக்கள் என்னை எளிதில் மறக்கமாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்