இந்தியா பிரதான செய்திகள்

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் தாக்குதலில் 8 இந்திய காவல் அதிரடிப்படை வீரர்கள் பலி

இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மாவில் மாவோயிஸ்ட்கள் நடத்திய வெடிகுண்டு தாக்குதல் ஒன்றில் எட்டு இந்திய சி.ஆர்.பி.எப் காவல் அதிரடிப்படை வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் . சத்தீஸ்கர் மாநிலத்தின் பல மாவட்டங்கள் மாவோயிஸ்டுகளின் கட்டுப்பாட்டில் உள்ளநிலையில் அவர்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் சி.ஆர்.பி.எப் காவல் அதிரடிப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சுக்மா மாவட்டத்தின் கிஸ்தாரம் பகுதியில் இன்று சி.ஆர்.பி.எப் 212-வது அணியை சேர்ந்த வீரர்கள் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது மண்ணில் புதைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை மாவோயிஸ்ட்கள் வெடிக்க வைத்துள்ளனர்.

இந்த கோர தாக்குதலில் 8 வீரர்கள் சம்பவ இடத்தில் பலியானதாகவும், 4 வீரர்கள் படுகாயமடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. காயமடைந்த வீரர்கள் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.