முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை திரும்பப்பெற வேண்டும் எனக் கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சி.பி.ஐ அதிகாரி தவறான தகவல் அளித்ததன் மூலம் தனக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும், இதனால், தனக்கு வழங்கிய தண்டனைத் தீர்ப்பை திரும்பப் பெற வேண்டும் எனவும பேரறிவாளன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை கடந்த ஜனவரி மாதம் விசாரித்த உச்ச நீதிமன்றம் இதுதொடர்பாக மூன்று வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு சி.பி.ஐ க்கு உத்தரவிட்டிருந்தது.
இந்தநிலையில் பேரறிவாளன் மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்த சி.பி.ஐ, பேரறிவாளனுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை திரும்பப் பெறக் கோரி பிரமானப்பத்திரம் தாக்கல் செய்ததுடன் வழக்கு விசாரணையை மீண்டும் நடத்தக் கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராரிக்க வேண்டும் எனவும் தெரிவித்தது
கொலை வழக்கில் தொடர்பில்லை என மனுதாரர் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் விசாரணை அதிகாரி வி. தியாகராஜன் மனுதாரரின் வாக்குமூலத்தை தவறாக பதிவு செய்துள்ளதாக தெரிவித்து, எவ்வித அடிப்படையும் இன்றி தாக்கல் செய்த மனு ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை எனவும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், குறித்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் மனுதாரர் குற்றவாளி இல்லை என கூறுவதை ஏற்க முடியாது எனத் தெரிவித்து பேரறிவாளனின் மனுவை தள்ளுபடி செய்துள்ளது. மேலும், இது தொடர்பாக 4 வாரத்தில் சி.பி.ஐ பதிலளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்