குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வட்ஸ்அப் சமூக ஊடகம் மீதான தடை இன்று நள்ளிரவுடன் நீக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கைத் தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணையகத்தின் தலைவரும், ஜனாதிபதியின் செயலாளருமான ஒஸ்டின் பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.
வைபர் தொடர்பான தடை நேற்றைய தினம் நீக்கப்பட்டிருந்த நிலையில் வட்ஸ்அப் சமூக ஊடகம் மீதான தடை இன்று நள்ளிரவுடன் நீக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். அண்மையில் கண்டியில் இடம்பெற்ற மோதல் சம்பவங்களைத் தொடர்ந்து சமூக ஊடக வலையமைப்பு மீதான தடை அமுல்படுத்தப்பட்டிருந்தது. முகநூல் தொடர்பில் அமுலில் உள்ள தடை எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரையில் நீடிக்கும் என அரசாங்கம் நேற்றைய தினம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.