பாகிஸ்தானில் அல்கய்தா தீவிரவாத இயக்கத்தினரிடம் பயிற்சி பெற்ற அமெரிக்கருக்கு 45 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது
அமெரிக்காவை சேர்ந்த 32 வயதான முகனாத் மகமது அல் பரேக் என்பவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர் பாகிஸ்தானில் அல்கொய்தா இயக்கத்தினரிடம் பயிற்சி பெற்ற பின்னர் வெளிநாட்டுக்கு சென்று அல்கய்தா இயக்கத்திலும் சேர்ந்துள்ளார்.
அத்துடன் அமெரிக்கர்களை கொல்வதற்கு அல்கய்தா இயக்கத்தினர் மேற்கொண்ட திட்டத்துக்கும் ஆதரவு வழங்கியுள்ளார். இது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட அவர் மீது அமெரிக்க நீதிமன்றில் பயங்கரவாத வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணையில் அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதையடுத்து அவருக்கு 45 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது.