163
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
நீர்க்கட்டண அதிகரிப்பு இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் நீர்க் கட்டணங்களை 30 வீதத்தினால் உயர்த்துவதாக நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்திருந்தது. எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவிற்கு அமைய நீர்க் கட்டண அதிகரிப்பு இடைநிறுத்தப்பட்டுள்ளது. நீர்க் கட்டண அதிகரிப்பு குறித்து ஆராய்வதற்கு மூன்று பேர் அடங்கிய குழுவொன்றை ஜனாதிபதி நியமித்துள்ளார்.
Spread the love