மலேசிய தேசிய கொடியை ஐ.எஸ் தீவிரவாதிகளின் அடையாளமாக குறிப்பிட்டமைக்கு எதிராக அமெரிக்காவில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அமெரிக்க தொழிலாளர் ஒன்றியமொன்றின் மீது இவ்வாறு வழக்குத் தொடரப்பட்டுள்ளது. கொடி தொடர்பிலான சர்ச்சை காரணமாக முஸ்லிம் பணியாளர் ஒருவரின் உறுப்புரிமை ரத்து செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு வெளியிட்டு, இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
மலேசிய தேசிய கொடியினை ஐ.எஸ் தீவிரவாதிகள் திரிபுபடுத்தி பயன்படுத்தியுள்ளதாகவும் மலேசிய தேசிய கொடி தொடர்பில் பிழையான கருத்து வெளியிடப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேசிய தேசிய தினத்தை முன்னிட்டு முனில் சானியர் என்ற பணியாளர் தேசிய கொடியை ஏற்றியிருந்தார். இந்தக் கொடி மலேசிய கொடி என அடையாளப்ப்படுத்தப்பட்டு நிகழ்வுகளில் கொடியை ஏற்றக் கூடாது என முனிருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது. இந்த நடவடிக்கையானது பணியாளர்களது உரிமையை மீறும் வகையிலானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.