ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பாகிஸ்தானுக்கு உத்தியோகப்பூர்வ பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். பாகிஸ்தான் ஜனாதிபதி மம்னூன் ஹூசைனின் அழைப்பின் பேரில் பாகிஸ்தான் செல்லும் ஜனாதிபதி அந்நாட்டு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஷஹீட் கஹான் அப்பாசி ஆகியோருடன், கலந்துரையாடல் ஒன்றினையும் மேற்கொள்ளவுள்ளார். குறித்த கலந்துரையாடலின் போது இருநாடுகளுக்கிடையிலான பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் கல்வி ஆகிய துறைகளில் உறவுகளை பலப்படுத்துவது குறித்து விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கை – பாகிஸ்தான் இருநாடுகளுக்கும் இடையில் 4 உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேன பாகிஸ்தான் செல்கிறார்..
210
Spread the love