1.3K
அரசியல் கைதியாக சிறைவாசம் அனுபவிக்கும் ஆனந்தசுதாகரன், தனது மனைவி யோகராணி நோயினால் உயிரிழந்ததையடுத்து அவரது இறுதிக் கிரியையில் மூன்று மணித்தியாலங்கள் மாத்திரம் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டார்.
யோகராணியின் இறுதி ஊர்வலம் ஒருபுறம் நடைபெற, சிறைச்சாலை வாகனத்தில் ஏறிய சங்கீதாவின் காட்சி பெரும் துயரத்தை ஏற்படுத்தியது. உலகத் தமிழர்கள் மாத்திரமின்றி, மனசாட்சி உள்ள மனிதர்கள் எல்லோரையும் கலங்க வைத்தது.
இந்த நிலையில் ஆனந்தசுதாகரன் சங்கீதா மற்றும் அவரது சகோதரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தமது தந்தையை விடுவிக்குமாறு வலியுறுத்தி கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.
கடந்த ஆண்டில் உக்ரேன் நாட்டில் ஒவ்வாமை காரணமாக மறைந்த ஈழத்தை சேர்ந்த காட்டூனிஸ்ட் அஸ்வின் வரைந்த கேலிச் சித்திரம் ஒன்று சங்கீதாவின் கோரிக்கையை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
Spread the love