Home இந்தியாதிரையரங்கு உரிமையாளர்களின் போராட்டம் வாபஸ் :

திரையரங்கு உரிமையாளர்களின் போராட்டம் வாபஸ் :

by admin

தமிழகத்தில் திரையரங்கு உரிமையாளர்களின் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக தமிழக அரச அதிகாரிகள் இன்று மாலை நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது ;உத்தரவாதம் அளித்துள்ளததனைத் தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இதனையடுத்து நாளை முதல் தியேட்டர்கள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

8 சதவீத கேளிக்கை வரி, பராமரிப்பு கட்டணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 16-ஆம் திகதி முதல் சென்னை தவிர்த்து தமிழ்நாடு முழுவதும் தியேட்டர்களை மூடி திரையரங்கு உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More