149
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சிரியாவின் குவாட்டா நகரிலிருந்து கிளர்ச்சியாளர்கள் வெளியேறத் தொடங்கியுள்ளனர். கிளர்ச்சியாளர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் இவ்வாறு நகரை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளனர்.
சுமார் 700 கிளர்ச்சியாளர்களும் 1300 பொதுமக்களும் இவ்வாறு குவாட்டாவை விட்டு வெளியேறியுள்ளனர். கிழக்கு குவாட்டாவில் கடுமையான யுத்தம் இடம்பெற்று வந்த காலத்திலேயே அப்பிரதேசத்தில் வாழ்ந்து வந்த மக்கள் வெளியேற்றப்பட்டு வந்தனர். அங்கு வான் மற்றும் தரை வழித் தாக்குதல்களினால் 1500 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 5300 பேர் வரையில் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love