Home இலங்கைபுலிகளை வீழ்த்திய அரசாங்கத்திற்கு பாதாள உலகத்தினரை அழிக்க முடியவில்லை என்பது வேடிக்கை….

புலிகளை வீழ்த்திய அரசாங்கத்திற்கு பாதாள உலகத்தினரை அழிக்க முடியவில்லை என்பது வேடிக்கை….

by admin

புலிகளிடமிருந்து நாட்டைப் பாதுகாத்த அரசாங்கத்திற்கு பாதாள உலகக் குழுவினரை அழிக்க முடியவில்லை என பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக பாதாள உலக குழுவினரினர் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பாதாள உலகக் குழுவினர் மீது நடவடிக்கை மேற்கொள்ள அரசாங்த அரசாங்கம் தயங்குவதாகவும் இந்த நடவடிக்கையானது வேடிக்கையாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இதற்கு தேசிய அரசாங்கத்தினை மாத்திரம் குறைகூற முடியாது எனவும் கடந்த கால அரசாங்கமும் இதற்குப் பொறுப்புக் கூற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் பாதாளஉலக குழுக்களை உருவாக்கிய அரசியல்வாதிகளே தற்போது தமது அரசியல் தேவைகளுக்காக அவர்களைப் பயன்படுத்தி வருவதாகவும் அவர் குறிறம் சுமத்தியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More