Home உலகம்துப்பாக்கிகள் மீதான கட்டுப்பாட்டை கடுமையாக்கும் கோரிக்கைக்கு ஆதரவாக அமெரிக்காவில் பேரணி

துப்பாக்கிகள் மீதான கட்டுப்பாட்டை கடுமையாக்கும் கோரிக்கைக்கு ஆதரவாக அமெரிக்காவில் பேரணி

by admin


அமெரிக்காவில் துப்பாக்கிகள் மீதான கட்டுப்பாட்டை கடுமையாக்கும் கோரிக்கைக்கு ஆதரவாக அந்நாடு முழுவதும் நடைபெறும் பேரணிகளில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். மார்ச் போர் அவர் லைவ்ஸ் (  march for our lives   ) எனப் பெயரிடப்பட்டுள்ள மாணவர் வழிநடத்தும் இந்தப் பேரணியானது, கடந்த மாதம் புளோரிடாவிலுள்ள பாடசாலையொன்றில் துப்பாக்கிதாரி ஒருவரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 17 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு பின்னர் உருவாக்கப்பட்டது
அமெரிக்கா முழுவதும், வெளிநாடுகளிலும இது தொடர்பான 800 பேரணிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

லண்டன், எடின்பேர்க், ஜெனீவா மற்றும் சிட்னி போன்ற உலகம் முழுவதுமுள்ள பல்வேறு நகரங்களிலும் துப்பாக்கி கட்டுப்பாட்டை கடுமையாக்கும் கோரிக்கைக்கு ஆதரவாக பேரணிகள் நடைபெறுகின்றன. வோஷிங்டனில் நடைபெறும் பேரணியில் சுமார் ஐம்பது லட்சம் பேர் பங்கேற்பார்கள் எனவும் அது கடந்தாண்டு பெண்கள் நடந்திய பேரணிக்கு பின்னர் நடைபெறும் பெரிய பேரணியாக இருக்குமெனவும் இதன் அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்;.

பாதி தானியங்கி துப்பாக்கிகளில் இணைத்து வேகமாக சுடுவதற்கு தேவையான பம்ப் ஸ்டாக்குகளை தடைசெய்ய உள்ளதாக கடந்த வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகை தெரிவித்திருந்தது. பாதி தானியங்கி துப்பாக்கிகளை, இயந்திர துப்பாக்கியாக மாற்றி அமைக்க உதவும் ஓர் உதிரிபாகம்தான் பம்ப் ஸ்டாக் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More