Home இந்தியாபாரதீய ஜனதாவின் வெற்றிகளும் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனமும்…

பாரதீய ஜனதாவின் வெற்றிகளும் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனமும்…

by admin


கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் பல நாட்டு தேர்தல்களில் முறைகேடு செய்தது போல கடந்த இந்திய நாடாளுமன்ற தேர்தலிலும் முறைகேடுகள் செய்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  பாஜகவிற்கும் இந்த நிறுவனத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா என்ற நிறுவனம் 50 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் கணக்கில் இருக்கும் தகவல்களை முறையின்றி சோதனை செய்து திருடி இருக்கிறது. பேஸ்புக் நிறுவனம் அதன் பயனாளிகளிடம் எந்த அனுமதியும் கேட்காமலே இந்த சோதனைக்கு அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பேஸ்புக் பயனாளிகளின் விவரங்கள் அவர்களுக்கே தெரியாமல் எடுக்கப்பட்ட பிரச்சனை இப்போது பெரிதாகி இருக்கிறது. பலரும் பேஸ்புக் பாதுகாப்பானது இல்லை என்று குற்றச்சாட்டை முன் வைத்து வருகிறார்கள்.


முதலில் பாஜக கட்சியே காங்கிரஸ் மீது இந்த முறைகேடு தொடர்பாக குற்றச்சாட்டு முன் வைத்தது. அதன்படி ராகுல் காந்தி தன்னுடைய ருவிட்டர் பக்கத்தை பிரபலப்படுத்த கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனத்தின் உதவியை நாடினார் என குறிப்பிட்டது. பொய்யான புகழை அதன் மூலம் ராகுல் பெற்றார் என்றும் குற்றச்சாட்டை முன் வைத்தது

ஆனால் இந்த முறைகேட்டில் பாஜக கட்சியே முக்கிய பங்கு வகித்து இருக்கிறது. கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனத்தின் இந்திய கிளையான ‘ஓவலேனோ பிசினஸ் இண்டலிஜென்ஸ்’ என்ற நிறுவனத்துடன் பாஜக கட்சியே தொடர்பில் இருந்துள்ளது. இதனை ‘ஓவலேனோ பிசினஸ் இண்டலிஜென்ஸ்’ நிறுவனத்தின் இந்திய நிறைவேற்று அதிகாரி ஒப்புக்கொண்டதும் தற்போது பாரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

இதேவேளை அமெரிக்காவில் இருக்கும் பேஸ்புக் தலைமையகம் சென்ற ஒரே பிரதமர் பாஜகவை சேர்ந்த மோடி மட்டுமே எனவும், 2014 தேர்தலில் உதவியதற்கான நன்றிக் கடன்தான் இந்த சந்திப்பு என காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டை முன் வைத்து இருக்கிறது. மேலும் இதில் நிறைய பணம் கைமாறி இருக்கலாம் என்றும் காங்கிரஸ் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.

இதே வேளை ‘ஓவலேனோ பிசினஸ் இண்டலிஜென்ஸ்’ நிறுவனத்தின் ‘லிங்க்டின்’ பக்கத்தில் முக்கியமான தகவல் இருக்கிறது. அதில் நான்கு வெவ்வேறு தேர்தல்களில் பாஜக கட்சிக்காக தாங்கள் உதவி செய்ததாகவும், அதன் மூலம் பாஜக கட்சி வெற்றி பெற்றது என்று அந்த நிறுவனம் வெளிப்படையாக குறிப்பிட்டு இருக்கிறது.

இதன் அடிப்படையில் ‘ஓவலேனோ பிசினஸ் இண்டலிஜென்ஸ்’ நிறுவனம் மூலம் பாஜக இந்தியா முழுக்க பொய்யான செய்திகளை பரப்பியதாக கூறப்படுகிறது. மேலும் பொய்யான புள்ளி விவரங்களை கொடுத்து மக்களின் மனநிலையை மாற்றி உள்ளது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிறுவனத்துடன் ராஜ்நாத் சிங்கே அதிக நெருக்கமாக இருக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More