140
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இணையத்தின் ஊடாக ஒரு பில்லியன் யூரோ களவாடிய நபர் ஒருவரை ஸ்பெய்ன் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இணையத்தின் ஊடாக சைபர் தாக்குதல்கள் மூலம் இந்தப் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. வங்கிகளை இணையத்தின் ஊடாக ஊடுருவி செய்து இவ்வாறு பாரியளவில் பணம் களவாடப்பட்டுள்ளது. 2013ம் ஆண்டு முதல் இந்த நபர் தலைமையிலான கும்பலொன்று இயங்கி வந்துள்ளது.
குறித்த கும்பல் நூற்றுக்கு மேற்பட்ட தடவைகள் வங்கிகள் மீது சைபர் தாக்குதல் நடத்தியுள்ளனர். குறித்த நபரை கைது செய்தமை ஏனைய இணைய கொள்ளையர்களுக்கு ஓர் எச்சரிக்கையாக அமையும் என ஸ்பெய்ன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Spread the love