குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ரஸ்ய ராஜதந்திரிகள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலிருந்து வெளியேற்றப்பட உள்ளனர். பிரித்தானிய வாழ் உளவாளி மற்றும் அவரது மகள் மீது இரசாயன தாக்குதல் நடத்தியதாக ரஸ்யா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு வெளியேற்றப்படவுள்ளனர்.
அமெரிக்க வரலாற்றில் பெருந்தொகையான ரஸ்ய ராஜதந்திரிகள் இந்த தடவையே வெளியேற்றப்படுகின்றனர். ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்பின் உத்தரவிற்கு அமைய இவ்வாறு ராஜதந்திரிகள் நாடு கடத்தப்பட உள்ளனர். ஜெர்மனி, பிரான்ஸ், உக்ரேய்ன், கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பலவும் ரஸ்ய ராஜதந்திரிகளை வெளியேற்றத் தொடங்கியுள்ளன. எவ்வாறெனினும் குறித்த உளவாளி மீது தாக்குதல் நடத்தவில்லை என ரஸ்யா நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது