அணு ஆயுத வர்த்தகத்தில் ஈடுபடுவதாக தெரிவித்து அமெரிக்காவின் தொழில் மற்றும் பாதுகாப்பு, வர்த்தக அமைப்பு பாகிஸ்தானின் 7 நிறுவனங்கள் மீதும் பொருளாதார தடை விதித்துள்ளது.
முன்னர் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஆதரவு வழங்புவதாக தெரிவித்து அந்த நாட்டுக்கு வழங்கி வந்த 2 பில்லியன் டொலர் நிதி உதவியை அமெரிக்கா நிறுத்தியிருந்தது.
மேலும் அங்குள்ள தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென அமெரிக்க தொடர்ந்து வலியுறுத்துவதன் காரணமாக இரு நாடுகளுக்கு இடையேயான முரண்பாடு நிலவி வருகின்றது.
இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் செயல்பட்டு வரும் பாகிஸ்தானை சேர்ந்த 7 நிறுவனங்கள் அணு ஆயுத வர்த்தகத்தில் ஈடுபடுவதாக தெரிவித்து அமெரிக்காவின் தொழில் மற்றும் பாதுகாப்பு, வர்த்தக அமைப்பு அந்த 7 நிறுவனங்கள் மீதும் பொருளாதார தடை விதித்துள்ளது.
பாகிஸ்தானை சேர்ந்த 7 நிறுவனங்களும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவு கொள்கை நலன்களுக்கு முரணாக நடந்துகொண்டமை உறுதிசெய்யப்பட்டதை தொடர்ந்து அவற்றின் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டதாக அந்த அமைப்பு அமெரிக்க அரசின் இணையதளத்தில் தெரிவித்துள்ளது