குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
வரவு செலவுத் திட்டம் நாட்டுக்கு நன்மை ஏற்படும் வகையில் அமையவில்லை என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தேசிய அமைப்பாளர் நிசாந்த ஸ்ரீ வர்னசிங்க தெரிவித்துள்ளார். வரவையும் செலவையும் கட்டுப்படுத்தும் வகையில் இம்முறை வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் கருத்தைப் போன்று மிகச் சிறந்த வரவு செலவுத் திட்டமாக இதனைக் கருத முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தக்கூடிய எந்தவொரு திட்டமும் இந்த வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் 7 வீத பொருளாதார வளர்ச்சியை எதிர்பார்க்கும் எந்தவொரு திட்டத்தையும் வகுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். விவசாய மற்றும் வேளாண்மைத்துறைகளை மேம்படுத்துவதற்கு எவ்வித திட்டங்களையும் அரசாங்கம் வகுக்கத் தவறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.