புகையிரதம் மூலம் சீனாவிற்கான பயணத்தினை வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொன் உன் மேற்கொண்டுள்ளார். அண்மையில் வடகொரிய ஜனாதிபதி உள்ளிட்ட பிரதிநிதிகள் சீனாவிற்கு உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொண்டிருந்தனர். இந்த பயணமானது புகையிரதம் மூலம் மேற்கொள்ளப்பட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2011ம் ஆண்டு பதவி ஏற்றுக் கொண்டதன் பின்னர் முதல் தடவையாக கிம் ஜொங் உன், வெளிநாட்டு பயணமொன்றை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 1100 கிலோ மீற்றர் தூரத்தை கிம் ஜொன் உன் உள்ளிட்ட பிரதிநிதிகள் புகையிரதம் மூலம் கடந்து சீனாவை வந்தடைந்து பின்னர் சீனாவிலிருந்து புகையிரதம் மூலமே வடகொரியா திரும்பியுள்ளனர். இந்த புகையிரதம் பயணம் பற்றிய விபரங்கள் பயணம் பூர்த்தியாகும் வரையில் இரகசியமாக பேணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.