159
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சட்டம், ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டரா மற்றும் அமைச்சர் மலிக் சமரவிக்ரம ஆகியோர் நேற்றிரவு சந்தித்து பேச்சுவார்ததை நடத்தியுள்ளனர்.
ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க வாய்ப்புள்ளதாக என்பது குறித்தே இதன் போது ஆராயப்பட்டுள்ளது.
இந்த சந்திப்புக்கு பின்னர் அமைச்சர்கள் மத்துமபண்டார மற்றும் மலிக் சமரவிக்ரம இடையில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது. இரண்டு பேச்சுவார்த்தைகளும் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Spread the love