குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான யோசனையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கையெழுத்திடாதது பிரச்சினைக்குரியது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
தான் வெளிப்படையாக பேசும் நபர் எனவும் அவர் கூறியுள்ளார். நுவரெலியா- சீதா –எலிய பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டார்.
இங்கு நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு முன்னாள் ஜனாதிபதி பதிலளிக்க முற்பட்ட போது ஆறுமுகன் தொண்டமான், முன்னாள் ஜனாதிபதியின் கையை அழுத்தமாக பிடித்துக்கொண்டு ஏதோ ஒன்றை கூறி அதனை தடுத்துள்ளதாக தெரியவருகிறது.
இங்கு தொடரந்தும் கருத்து வெளியிட்டுள்ள ஆறுமுன் தொண்டமான், மனிதர்களின் பெறுமதியான சொத்துக்களாக கண்களை கருத முடியும். இந்த பெறுமதியான இரண்டு கண்கள் எனக்கு கிடைத்துள்ளன. அதில் ஒரு கண் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டாவது கண் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எனவும் கூறியுள்ளார்.