அரச அதிகாரிகள் மக்களுக்காக சேவை செய்ய வேண்டும். அதே நேரத்தில் எங்களுடைய மக்கள் குறித்த அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இல்லாத விடையத்தை செய்யச் சொல்வதும்,சட்டத்தில் செய்ய முடியாதவற்றை செய்து தர வேண்டும் என நிர்ப்பந்திப்பதும் ஒரு சில மக்கள் மத்தியில் நீண்ட நாள் கோரிக்கையாக காணப்படுகின்றது என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
மன்னார் தோட்டவெளி கிராமத்தில் அமைக்கப்பட்ட பொது நோக்கு மண்டபம் நேற்று திங்கட்கிழமை(3) மாலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் விருந்தினராக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
இதன் போது மன்னார் பிரதேச செயலாளர் என்.பரமதாசன்,மன்னார் பிரதேச சபை உறுப்பினர்கள்,கிராம மக்கள்,திணைக்கள அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர். இதன் போது குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,,,,,
சட்டத்தில் இல்லாத விடயத்தை செய்யச் சொல்வதும்,சட்டத்தில் செய்ய முடியாதவற்றை செய்து தர வேண்டும் என அதிகாரிகளை நிர்ப்பந்திப்துமான நிகழ்வுகளை தவிர்த்து இந்த சேவையாளர்களுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்கி இங்கு கடமையாற்றுகின்ற உத்தியோகத்தர்கள் மூலம் சரியான சேவையை பெற்றுக்கொள்ளுங்கள்.
-எமது கிராமங்களில் மக்களுக்காக பல்வேறு சவால்களுக்கு மத்தியில் கடமையாற்றி பின் அங்கிருந்து இட மாற்றம் பெற்று எத்தைனையோ அதிகாரிகள் சென்றுள்ளனர். ஆனால் அவர்களின் சேவை நலன் தொடர்பில் யாரும் கதைப்பதில்லை.
-ஆனால் இன்றைய நிகழ்வில் அதிகாரிகள்,கிராம அலுவலர்களை அழைத்திருப்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகின்றேன். எனவே தோட்டவெளி பொது நோக்கு மண்டபத்தை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைவதோடு,இங்கு வருகின்ற அதிகாரிகளுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்கி சேவையை திறம்பட பெற்றுக்கொள்ளுங்கள். என அவர் மேலும் தெரிவித்தார்.