141
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழில் யாசகர் ஒருவருடன் வெளிநாட்டு பெண்மணி அருகில் அமர்ந்து உரையாடும் படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. யாழ். வேம்படி சந்திக்கு அருகில் உள்ள கழிவுநீர் வாய்க்கால் சுவர் மீது இன்றைய தினம் மதியம் யாசகர் ஒருவர் உட்கார்ந்திருந்துள்ளார்.
அதனை அவ் வீதி வழியாக சென்ற வெளிநாட்டு பெண்மணி அவதானித்து அவருக்கு அருகில் அமர்ந்து உரையாடினார்.அதை அவ் வீதி வழியாக சென்ற பலரும் ஆச்சரியத்துடன் பார்வையிட்டு சென்றதுடன் சிலர் அதனை ஒளிப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.
Spread the love