Home இலங்கைஉதயங்க வீரதுங்கவை இலங்ககக்கு கொண்டுசெல்ல நடவடிக்கை…

உதயங்க வீரதுங்கவை இலங்ககக்கு கொண்டுசெல்ல நடவடிக்கை…

by admin

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள்  தூதுவர்  உதயங்க வீரதுங்கவை இலங்ககக்கு கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவற்துறை  நிதி மோசடி விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.

தற்போது டுபாயில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவரை வெளிவிவகார அமைச்சின் ஊடாக நாட்டுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  நிதி மோசடி விசாரணைப் பிரிவு இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் அறிவித்துள்ளது.

மிக் விமான கொடுக்கல் வாங்களின்போது 7.833 மில்லியன் டொலர்களை மோசடி செய்ததாக உதயங்க வீரதுங்க மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதோடு, கடந்த 2016ஆம் ஆண்டு ஒக்டோபர் 20ஆம் திகதி அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More