குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
புளொரிடா துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பாடசாலை மாணவ மாணவியர் கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். கடந்த மாதம் புளொரிடா பாடசாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 17 மாணவ மாணவியர் கொல்லப்பட்டிருந்தனர். துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற இந்த பாடசாலையில் புத்தக பைகளை கொண்டு வருவது தொடர்பில் புதிய நடைமுறையொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மாணவ மாணவியர் ட்ரான்ஸ்பெரன்ட் புத்தகப் பைகளையே கொண்டு வர வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. புத்தகங்கள் பாடசாலை உபகரணங்களைத் தவிர்ந்த வேறு பொருட்கள் புத்தக பையில் கொண்டு வந்தால் தெளிவாகத் தெரியக்கூடிய வகையில் இந்த புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எவ்வாறெனினும், இந்த புதிய புத்தக பைகளின் ஊடாக தாக்குதல்களை தடுக்க முடியாது என பாடசாலை மாணவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.