குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவை கைது செய்வதனை தடுக்கும் வகையிலான இடைக்கால தடையுத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூலை மாதம் 3ம் திகதி வரையில் இந்த தடையுத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
பொதுச் சொத்து துஸ்பிரயோக குற்றச்சாட்டின் அடிப்படையில் தம்மை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அதனை தடுக்கும் வகையில் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்குமாறும் கோதபாய சட்டத்தரணிகள் ஊடாக விடுத்த மனுவிற்கு இந்த இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
டி.ஏ. ராஜபக்ஸ நினைவுத் தூபி மற்றும் அருங்காட்சியகம் என்பனவற்றை அமைத்த போது பாரியளவில் நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 83 மில்லியன் ரூபா பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக கோதபாய ராஜபக்ஸ மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.