Home இலங்கைசிங்கள குடியேற்றம் தொடர்ந்தால் சுதந்திர தமிழீழம் மலரும். – சிவாஜி.

சிங்கள குடியேற்றம் தொடர்ந்தால் சுதந்திர தமிழீழம் மலரும். – சிவாஜி.

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

சிங்கள குடியேற்றங்கள் தொடர்ந்தால் சுதந்திர தமிழீழம் மலரும் என வடமாகாண சபை உறுப்பினர் எம்,கே,சிவாஜிலிங்கம் தெரிவித்தார். முல்லைத்தீவு உள்ளிட்ட வன்னி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் ஆராயும் விஷேட அமர்வு இன்றைய தினம் வியாழக்கிழமை வடமாகாண சபையில் நடைபெற்றது.

அதன் போது உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார் மேலும் தெரிவிக்கையில் ,

திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களுக்கு எதிராக நாங்கள் வடமாகாண சபையில் ஒரு நாள் அமர்வு நடாத்தி , கத்துவதன் மூலம் தடுத்து விட முடியாது. அது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றில் பேச வேண்டும். திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை தடுக்க அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அதற்காக ஒரு நாள் நாடாளுமன்ற அமர்வை நடத்தலாம்.

நாடாளுமன்றில் ஒத்திவைத்த பிரேரணை கொண்டு வரலாம். ஆனால் அந்த நேரத்தில் நாடாளுமன்றில் 40 உறுப்பினர்கள் கூட இருப்பார்களே தெரியாது. நாடாளுமன்றில் இந்த பிரச்சனை பேசப்பட்டு தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுதந்திர தமிழீழம் மலர வேண்டுமா ? என்பதை சிங்கள தலைமைகளே தீர்மானிக்க வேண்டும். சிங்கள குடியேற்றங்கள் தொடருமாக இருந்தால் சுதந்திர தமிழீழம் மலர்வதற்கான காலம் வெகு தூரத்தில் இல்லை என்பதை சிங்கள தலைவர்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும் என தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More