Home இலங்கைவிஷேட அமர்வில் மாயமான உறுப்பினர்கள்

விஷேட அமர்வில் மாயமான உறுப்பினர்கள்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

முல்லைத்தீவில் திட்டமிட்டு சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுவது தொடர்பிலான விஷேட அமர்வில் தேநீர் இடைவேளையின் பின்னர் பல உறுப்பினர்கள் மாயமாகி இருந்தனர். முல்லைத்தீவு உள்ளிட்ட வன்னி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் ஆராயும் விஷேட அமர்வு இன்றைய தினம் வியாழக்கிழமை வடமாகாண சபையில் நடைபெற்றது.

சபையில் உறுப்பினர்கள் பலரும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை எதிர்த்து கருத்து தெரிவித்தனர். முன்னதாக காலை வடமாகாண முதலமைச்சர் காணி அபகரிப்பு மற்றும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் தொடர்பில் உரையாற்றினார். அதன் பின்னர் பலஉறுப்பினர்கள் அவைத்தலைவரிடம் எழுத்து மூலம் அனுமதி கோரி உரையாற்றினர்கள்.

பின்னர் சபை மதியம் 11.30 மணியளவில் தேநீர் இடைவேளைக்கு ஒத்திவைத்து மீள சபை ஆரம்பிக்கும் போது , முதலமைச்சர், சிங்கள உறுப்பினர்கள் உள்ளிட்ட 17 உறுப்பினர்கள் மாயமாகி இருந்தனர்.

தொடர்ந்து சபையில் ஏனைய உறுப்பினர்கள் உரையாற்றும் போது உறுப்பினர்கள் ஒருவராக மாயமாக தொடங்கினார்கள். இறதியில் சபை 2 மணியளவில் ஒத்திவைக்கப்படும் போது சபையில் 15 உறுப்பினர்கள் மாத்திரமே இருந்தனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More