166
முல்லைத்தீவு உள்ளிட்ட வன்னி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் ஆராயும் விஷேட அமர்வு இன்றைய தினம் வியாழக்கிழமை வடமாகாண சபையில் நடைபெற்றது. அதன் போது , சிங்கள குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டு உள்ள பகுதிகளுக்கு மாகாண சபை உறுப்பினர்கள் நேரில் சென்று ஆராய்வது என தீர்மானிக்கப்பட்டது.
முல்லைத்தீவுக்கு செல்வதற்கு யாழ்ப்பாண உறுப்பினர்கள் எங்கு வருவது, எப்படி போவது , போன்றும் ஏனைய மாவட்ட உறுப்பினர்கள் எப்படி எங்கே வருவது எனவும் , சபையில் இல்லாத உறுப்பினர்களுக்கு எவ்வாறு அறிவிப்பது அவர்களை எவ்வாறு ஒழுங்கமைப்பது என்றும் , உறுப்பினர்கள் பல திட்டங்களை முன் வைத்து கருத்துக்களை தெரிவித்தனர்.
சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக எவ்வாறு முல்லைத்தீவு போவது என்பது தொடர்பில் உறுப்பினர்கள் விரிவாக ஆராய்ந்தனர்.
Spread the love