குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் யார் உடன்பாடுகளை ஏற்படுத்திக்கொள்கின்றனர் என்பது நாட்டு மக்களுக்கு தெரியவந்ததாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பில் அரசாங்கத்துடன் இணைந்து வாக்களித்த போலி எதிர்க்கட்சி எது உண்மையான எதிர்க்கட்சி எது என்பது ஒப்புவிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சி இலக்கங்களில் தோற்று போனாலும் அரசியல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளது. ஆரம்பத்தில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எடுத்த நிலைப்பாட்டில் தொடர்ந்தும் இருந்திருந்தால், முடிவு இதனை விட வேறு விதமாக அமைந்திருக்கும்.
இது உண்மையான மக்களின் நிலைப்பாடு அல்ல எனவும் நாட்டு மக்களின் உண்மையான நிலைப்பாடுகளை அறிந்து கொள்ள வேண்டுமாயின் ஒத்திவைத்துள்ள மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு சவால் விடுப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.