எஸ்சி, எஸ்டி வன்கொடுமை சட்ட விவகாரம் தொடர்பாக சமீபத்தில் நடந்த போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்ற உத்தரபிரதேச கிராம தலித் இளைஞர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், அரசு அதிகாரியை விசாரணையின்றி உடனடியாக கைது செய்யக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி மனு தாக்கல் செய்யுமாறு பல்வேறு தரப்பினர் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
ஆனால், மனு தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டதால், மத்திய அரசைக் கண்டித்து கடந்த 2-ம் திகதிவட மாநிலங்களில் இடம்பெற்ற போராட்டத்தில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் வன்முறையில் ஈடுபட்டதாக சில தலித் இளைஞர்களின் பெயரை உயர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் பட்டியலிட்டுள்ளதில் உத்தரபிரதேச மாநிலம் ஷோபாபூர் கிராமத்தைச் சேர்ந்த 26 கோபி பர்யா முதலிடத்தில் இருந்தார்.
இந்நிலையில் கோபி மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அதேவேளை தயாரிக்கப்பட்ட இந்தப் பட்டியல் காவல்துறையனரிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தங்கள் மீதும் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் காரணமாக இந்தப் பட்டியலில் உள்ள இளைஞர்கள் தங்கள் சொந்த ஊரை விட்டு தலைமறைவாகி உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது