Home இலங்கைகண்டி வன்முறைகள் தொடர்பில் இராணுவத்தில் பணிபுரியும் இருவர் கைது

கண்டி வன்முறைகள் தொடர்பில் இராணுவத்தில் பணிபுரியும் இருவர் கைது

by admin


கண்டி – பூஜாபிட்டியவில் அண்மையில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பில் இராணுவத்தில் பணிபுரியும் இருவரை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். பூஜாபிட்டிய – அம்பத்தென்ன பிரதேசத்தில் உள்ள மத வழிபாட்டுத் தளம் ஒன்றை சேதப்படுத்தியமை தொடர்பில் தற்போது இராணுவத்தில் பணிபுரியும் இருவரே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த இருவரும், அம்பத்தென்ன கஹவத்தை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் ஒருவர் , புத்தளம் சின்னவில்லுவில் அமைந்துள்ள 43ஆவது படைப்பிரிவில் பணியாற்றுவதுடன், மற்றையவர் கெக்கிராவையில் அமைந்துள்ள இராணுவ பயிற்சிக் கல்லூரியில் பணியாற்றுபவர் எனவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கைப்பற்றப்பட்ட சி.சி.டி.வி காணொளிகளின் அடிப்படையில் இருவரும் கைதுசெய்யப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More