குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை விட்டு விலகக் கூடாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தை விலக வேண்டுமென அமைச்சர் அனுரபிரியதர்சன யாபா யோசனை ஒன்றை முன்வைத்த போது அதற்கு, சந்திரிக்கா கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். அண்மையில் நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் சுதந்திரக் கட்சி தோல்வியைத் தழுவியதற்கு ஐக்கிய தேசியக் கட்சி காரணமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கட்சிக்குள் இருக்கும் ஒரு சிலரின் செயற்பாடுகளே கட்சி தோல்வியடையக் காரணம் என தெரிவித்துள்ளார். 2015ம் ஆண்டு ஜனவரி 8ம் திகதி துரத்தியடிக்கப்பட்ட கொலைகாரர்கள், மோசடியாளர்கள் உள்ளிட்ட பலரையும் மீளவும் இணைத்துக் கொண்டமையே சுதந்திரக் கட்சியின் வீழ்ச்சியாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.