213
வடமாகாண முதலமைச்சராக மாகாண கல்வி அமைச்சர் க. சர்வேஸ்வரன் நாளை பதவியேற்கவுள்ளார். முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆன்மீக சுற்றுப்பயணமாக இந்தியாவுக்குச் சென்றுள்ளதை அடுத்து, பதில் முதலமைச்சராக க. சர்வேஸ்வரன் கடமையாற்றவுள்ளார். இருவாரங்களுக்கு க. சர்வேஸ்வரன் பதில் முதலமைச்சராகக் கடமையாற்றுவார் என்று தெரிவிக்கப்படுகிறது.
பத்தரமுல்லவில் அமைந்துள்ள வட மாகாண ஆளுநரின் உப அலுவலகத்தில், ஆளுநர் ரெஜினோல்ட் குரே முன்னிலையில் அவர் பதவியேற்கவுள்ளார்.
Spread the love