164
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மாங்குளம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட முறிகண்டி வசந்தநகர் பகுதியில் 8 வயது சிறுவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார் இன்று (12) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது
வீடு அமைந்துள்ள காணியில் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றிலிருந்தே குறித்த சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட சடலம் கிளிநாச்சி வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகளிற்காக வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகளை மாங்குளம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த சிறுவன் அதே பகுதியை சேர்ந்த சதீஸ்குமார் கனிஸ்டன் என்ற 8 வயது சிறுவன் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love