Home இலங்கைகண்ணி வெடி அகற்றும் பணியாளர்களின் புத்தாண்டு நிகழ்வுகள்

கண்ணி வெடி அகற்றும் பணியாளர்களின் புத்தாண்டு நிகழ்வுகள்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

சார்ப் மனித நேயக் கண்ணி வெடி அகற்றும் பணியாளர்களின் புத்தாண்டு நிகழ்வுகள் கடந்த திங்கள் கிழமை சிறப்பாக இடம்பெற்றது. முப்பதாண்டு கால யுத்தம் நிறைவடைந்த பின்னர் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பல பகுதிகளில் புதைக்கப்படிருந்த நிலக்கிழ்வெடி பொருட்களை அகற்றுவதில் பல மனிதநேய நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றனர் அவ்வாறு பணி புரியும் சார்ப் மனித நேயக்கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தின் தமிழ் சிங்களப்புத்தாண்டு கடந்த 09.04.2018 ம்திகதி நிறுவனத்தின் திட்டமிடல் முகாமையாளர் ஒய்வு பெற்ற கப்டன் பிரபாத்த தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

நிறுவனத்தில் பணிபுரியும் மிதி வெடி அகற்றுனர்களுக்கிடையில் விளையாட்டு நிகழ்வுகளும் கலை நிகழ்வுகளும் இடம் பெற்றது. விளையாட்டு நிகழ்வுகளாக கயிறு இழத்தல் கிடுகு பின்னுதல் முட்டை பிடித்தல் பணிஸ் உண்ணுதல் போன்ற விளையாட்டுகள் இடம்பெற்றுதுடன். கலை நிகழ்வுகளும் சிறப்பாக இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் சக மனித நேய கண்ணி வெடி அகற்றும் நிறுவனத்தின் உயர் அதிகரிகள் சார்ப் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தின் உயர் நிலை அதிகாரிகள் எனப்பலர் கலந்து சிறப்பித்தனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More