குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சிரியாவில் இடம்பெற்ற இரசாயன ஆயுத தாக்குதல் வெளிநாட்டு முகவர்களின் செயலாகும் என ரஸ்யா குற்றம் சுமத்தியுள்ளது. ரஸ்யாவின் வெளிவிவகார அமைச்சர் செர்ஜீ லாவ்ரோவ் ( Sergei Lavrov, ) இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
சிரியாவில் இரசாயன தாக்குதல் இடம்பெற்றமை தொடர்பான சாட்சியங்கள் உண்டு என பிரான்ஸூம், அமெரிக்காவும் தெரிவித்து வருகின்ற நிலையில் ரஸ்யா இவ்வாறு தெரிவித்துள்ளது. ரஸ்யா மீது அச்சம் கொண்ட தரப்பினர் இந்த தாக்குதலை நடத்தியிருக்கக் கூடும் எனவும், ரஸ்யா மீது குற்றம் சுமத்தும் நோக்கில் இவ்வாறு சில சக்திகள் இரசாயன ஆயுத தாக்குதலை நடத்தியிருக்கலாம் எனவும் லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த இரசாயன தாக்குதலை பிரித்தானியா மேற்கொண்டுள்ளதாகவும் அது குறித்த சாட்சியம் உண்டு எனவும் ரஸ்ய பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.