மன்னாரில் த.தே.கூ இரு சபைகளை இழந்தமை எமது கட்சிக்குள் முரண்பாடுகளும் உறுப்பினர்களிடையே உள்ள வேற்றுமை உணர்வுமே காரணம்-எம்.பி.சாள்ஸ் நிர்மலநாதன்.
இம்முறை நடந்து முடிந்த உள்ளுராட்சி சபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சற்று பின்னடைவை சந்தித்துள்ளது. அதுவும் மன்னார் மாவட்டத்தினைப் பொறுத்த மட்டடில் 03 சபைகளை இழந்தமை கவலைக்குரிய விடையம் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
-இலங்கை தமிழரசுக்கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை(14) மாலை இடம் பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
-அவர் மேலும் தெரிவிக்கையில்,
-உள்ளுராட்சி மன்ற தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு மன்னார் நகர சபை மற்றும் நானாட்டான் பிரதேச சபை ஆகிய உள்ளுராட்சி மன்றங்களையும் கைப்பற்றியுள்ளது.
முசலிப் பிரதேச சபையானது முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பிரதேசம் .குறித்த சபை எமக்கு இழப்பல்ல. மிகுதியாகவுள்ள மன்னார் பிரதேச சபை மற்றும் மாந்தை மேற்கு பிரதேச சபை ஆகிய இரண்டு சபைகளினையும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு இழந்துள்ளது.
குறித்த சபைகளின் இழப்புக்கு காரணம் என்றால் மக்கள் குழம்பிப் போய்யுள்ளமையே.
அதனடிப்படையில் எமது கட்சிக்குள் முரண்பாடுகளும் கட்சி உறுப்பினர்களுக்கிடையே உள்ள வேற்றுமை உணர்வும், வட்டார முறைத்தேர்தல் மற்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்று புதிய கட்சிகளை தொடங்கியமையாலும் எமக்குள்ளே நாம் பிளவுபட்டதால் எமக்கான வாக்குகள் உடைக்கப்பட்டு உறுப்பினர்கள் சிதறடிக்கப்பட்டு அது ஒரு வலுவாக ஆட்சியமைக்க முடியாமல் போனதும் தோல்விக்கு காரணமாக அமைந்துள்ளது.
ஐக்கியதேசிய கட்சியும் அகிலஇலங்கை மக்கள் காங்கிரஸ் இரண்டு கட்சிகளும் இணைந்து 03 சபைகளையும் கைப்பற்றியது.11 ஆசனம் பெற்றுக் கொண்ட ஐக்கிய தேசியக்கட்சி விகிதாசாரத்தில் 07ஆசனமே கிடைக்கும்.
அவர்கள் பெற்றுக் கொண்ட வாக்குகள் 1635 பிரிந்து நின்ற கட்சிகள் மொத்தமாக 2478 பெற்றுக் கொண்ட போதும் சூரியன் சின்னத்தில் 08 உறுப்பினர்கள் விகிதாசாரத்தில் தெரிவாகியிருந்த வேளையில் 03 உறுப்பினர்கள் நடுநிலமை வகித்த போதும் 05 உறுப்பினர்கள் அமைச்சர் றிஸாட் பதியுதீனுக்கு ஆதரவாக இருந்ததால் மாந்தை மேற்கு பிரதேச சபையினையும் நானாட்டான் பிரதேச சபையினையும் இழந்தோம்.
ஒரு ஆசனத்தினால் மன்னார் பிரதேச சபையினையும் இழந்தோம் .சைக்கிள் சின்னத்தில் வெற்றி பெற்ற உறுப்பினர் நடு நிலமை வகித்தார் அவரை மதிக்கின்றேன்.
தமிழ் தேசியக்கூட்டமைப்பு மக்களை ஏமாற்றுகின்றது என்று தேர்தல் பிரச்சாரங்களை செய்து போட்டியிட்ட விடுதலைப்புலிகள் போராளிக்கட்சிகள் என்று தங்களை அடையாளப்படுத்தியவர்கள் கடைசி நேரத்தில் ஆளும் கட்சிப் பக்கம் தலைசாய்த்தது கவலைக்குரிய விடையம்.
முடிந்ததை கதைத்து பயணில்லை. இனியாவது தமிழ் மக்களின் பிரதி நிதிகளாக இருக்கின்ற வீடு , சைக்கிள் , சூரியன் , ஒன்றிணைந்து ஒற்றுமையாக செயலாற்ற வேண்டும்.
அத்தோடு அடுத்த தடவை அனைத்து சபைகளையும் கைப்பற்ற வேண்டும்.
இம்முறை வெற்றி பெற்ற அனைத்து உறுப்பினர்களிடமும் மன்னார் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் இனம், மதம், மொழி வேறுபாடுகள் இன்றி எல்லா மக்களினதும் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் தங்கள் ஒவ்வொருவரினதும் சேவை அமையட்டும் என கேட்டுக்கொள்ளுகின்றேன்.என அவர் மேலும் தெரிவித்தா