171
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
யாழில்.இரவு உணவு வாங்குவதற்காக சென்ற குடும்பஸ்தர் வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். சுன்னாகம் பகுதியில் நேற்று இரவு 8.30 மணியளவில் குறித்த விபத்து சம்பவம் நடைபெற்றுள்ளது. குறித்த விபத்தில் மல்லாகத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 41 வயதுடைய தர்மலிங்கம் ராமேஸ்வரன் என்பவரே உயிரிழந்தவராவார். இவருடன் கூட சென்ற மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பளை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெயரியவருவதாவது ,
மல்லாகத்தில் உள்ள தமது வீட்டில் இருந்து இரவு உணவு வாங்குவதற்காக சுன்னாகம் நோக்கி குறித்த இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, பட்டா ரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானார்கள்.
விபத்தில் படுகாயமடைந்த ராமேஸ்வரனை அங்கிருந்தவர்கள் மீட்டு யாழ்.போதனா வைத்திய சாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்த போதிலும், இரவு 10 மணியளவில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.
குறித்த விபத்து சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்த சுன்னாக காவற்துறையினர் பட்டா ரக வாகன சாரதியை கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.
Spread the love