நேஷன் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் கீத் நொயாரை கடத்தி தாக்கியமை தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் இராணுவ புலனாய்வு பிரிவின் பணிப்பாளரும், இராணுவ படைகளின் பிரதானியுமான அமல் கருணாசேகரவின் விளக்கமறியலில் நீடிக்கப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு சட்ட விரோதமாக தடுத்து வைக்கப்பட்டமை , சித்திரவதை செய்யப்பட்டமை, ஆயுதத்தால் தாக்கப்பட்டமை, கொலை செய்ய முயற்சிக்கப்பட்டமை மற்றும் நெயார் குடும்பத்தினருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில் உதவி ஒத்தாசை புரிந்ததாக கூறி கைது செய்யப்பட்ட அமல் கருணாசேகர விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இது தொடர்பிலான வழக்கு கல்கிஸ்ஸ மேலதிக நீதவான் முன்னிலையில் இடம்பெற்ற நிலையில் அவரை எதிர்வரும் மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.