குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நிரந்தரமான எதிர்காலத்தை ஏற்படுத்திக்கொள்வது ஏனைய நாடுகளை போன்று இலங்கையினதும் பிரதான நோக்கம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். லண்டன் லேன்கெஸ்டர் ஹவுசில் நேற்று நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் நிறைவேற்று சபையில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
வறுமையான நாடு என்ற வகையில், எதிர்கால சந்ததியினருக்கு பூமி, காடு, ஆறுகள்,கடல் வளங்களை பாதுகாத்து நிரந்த எதிர்காலத்தை அடைய இலங்கை விசேட அக்கறையும் செயற்பட்டு வருகிறது.பூகோள ரீதியான இலங்கையின் அமைவிடத்தை பயன்படுத்தி மூலதனங்களை உற்பத்தி செய்வது குறித்து இலங்கை விசேட கவனத்தை செலுத்தியுள்ளது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.