Home இலங்கை2 கிலோ ஹெரோயின் போதைப் பொருளுடன் வெளிநாட்டுப் பிரஜைகள் கைது

2 கிலோ ஹெரோயின் போதைப் பொருளுடன் வெளிநாட்டுப் பிரஜைகள் கைது

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இரண்டு கிலோ கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப் பொருளுடன் வெளிநாட்டுப் பிரஜைகள் கைது செய்யபபட்டுள்ளனர்.  மூன்று மாலைதீவு பிரஜைகளும் ஒரு பாகிஸ்தானியரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட ஹெரோயின் போதைப் பொருளின் சந்தைப் பெறுமதி 20 மில்லியன் ரூபா எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே கைது செய்யப்பட்ட நபர் ஒருவரின் தகவல்களின் அடிப்படையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு மாத காலப் பகுதியில் போதைப் பொருள் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் பத்து மாலைதீவு பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட பாகிஸ்தானியரே இந்தப் போதைப் பொருள் கடத்தல் கும்பலை வழிநடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More