Home இலங்கைகண்டியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

கண்டியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கண்டியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இனந்தெரியாத நபர்கள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். கண்டி அன்கும்புர பாபலியகொட என்னும் பிரதேசத்தில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றுக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தாக்குதல் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. காரில் வந்தவர்களே தாக்குதல் நடத்தியதாகவும் தாக்குதல் நடத்துவதற்கு பயன்படுத்திய கார் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதுடன், ரி56 ரக துப்பாக்கி ஒன்றையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More