சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் நகரின் அருகே ரசாயன தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகச் சந்தேகப்படும் டூமா நகரில் சர்வதேச ரசாயன ஆயுத ஒழிப்பு நிறுவனத்தின் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
டூமா நகருக்குச் சென்ற ரசாயன ஆயுதங்கள் ஒழிப்பு நிறுவன குழுpவினர் அங்கிருந்த மாதிரிகளையும், பிற பொருட்களையும் சேகரித்துள்ளனர் கடந்த ஏப்ரல் 7ம் திகதி இந்த ரசாயன வான்வழித் தாக்குதலை சிரியா அரசு நடத்தியுள்ளதாகவும் இதில் பலர் கொல்லப்பட்டதாகவும் மேற்குலக நாடுகள் தெரிவித்துள்ள நிலையில் டூமா நகரை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சிரியாவும், ரஷ்யாவும் இதற்கு மறுப்புத் தெரிவித்திருந்தன.
இந்த தாக்குதலுக்கு பதிலடியாக, சிரியா அரச தளங்களின் மீது அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் நாடுகள் கூட்டாக வான்வழித் தாக்குதல் நடத்தியிருந்தன.
கடந்த புதன்கிழமை டூமா நகருக்குள் இந்த குழுவினர் செல்லவிருந்த போதும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஆபத்து சோதனை குழுவினர் விடுத்த தாக்குதல் எச்சரிக்கையினால் அவர்களின் பயணம் தாமதமாகியிருந்தது.
இந்தநிலையில் இறுதியாக, தாக்குதல் நடந்த இரண்டு இடங்களில் ஒரு இடத்தை இக்குழு ஆய்வு செய்து மாதிரிகளை சேர்த்துள்ளதாகவும் அவை நெதர்லாந்தில்; உள்ள ரசாயன ஆயுதங்கள் ஒழிப்பு நிறுவனத்தின் ஆய்விடத்திற்கு எடுத்து செல்லப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது