132
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அத்தனகல்லவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். நேற்றைய தினம் இரவு இடம்பெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
37 வயதான வர்த்தகர் ஒருவரே சம்பவத்தில் இந்த உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை. இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
Spread the love