157
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை பட்டதாரி பயிலுநர் நேர்முகத்தேர்வுக்கு சமூகமளிக்காத பட்டதாரிகளுக்கான மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது என கிளிநொச்சி அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் அறிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகளுக்கு கடந்த 23.4.2018 மற்றும் 24.4.2018 ஆகிய திகதிகளில் கிளிநொச்சி மாவட்டத்தில் நேர்முகத்தேர்வு நடைபெற்றது.
இருந்த போது பல பட்டதாரிகள் குறித்த நேர்முகத் தேர்வுக்கு சமூகமளிக்கவில்லை என்ற தகவல்கள் கிடைக்கப்பெற்றன. எனவே இந் நேரமுகத்தேர்விற்கு சமூகமளிக்காத பட்டதாரிகளிற்கான நேர்முகத்தேர்வினை வரும் 01.05.2018 ம் திகதி கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மீண்டும் நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதுவே இறுதிச் சந்தர்ப்பம் என்பதால் இதுவரை சமூகமளிக்காத பட்டதாரிகள் 01.05.2018 அன்று மாவட்ட செயலகத்திற்கு நடைபெறும் நேர்முகத்தேர்வில் தோற்றமுடியும் என கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.
Spread the love