Home இலங்கைவிஸ்தரிக்கப்பட்ட நிகவெவ – மாமினியாவ குடிநீர் வழங்கல் திட்டம் திறந்துவைப்பு…

விஸ்தரிக்கப்பட்ட நிகவெவ – மாமினியாவ குடிநீர் வழங்கல் திட்டம் திறந்துவைப்பு…

by admin

அநுராதபுர மாவட்டம், கெக்கிராவ பிரதேசத்தில் மிக நீண்ட காலமாக நிலவிவரும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வாக விஸ்தரிக்கப்பட்ட நிகவெவ – மாமினியாவ குடிநீர் வழங்கல் திட்டத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று (28) பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைத்தார்.

15 மில்லியன் ரூபா செலவில் அமையப்பெற்றுள்ள இந்த குடிநீர் வழங்கல் திட்டத்தின் மூலம் அப்பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 350 குடும்பங்கள் பயனடையவுள்ளன. சிறுநீரக நோயினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள வடமத்திய மாகாணத்தில் இவ்வாறான திட்டங்களின் மூலம் சிறுநீரக நோய் ஏற்படுவது மட்டுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மரச் சின்னத்தை விஸ்தரிப்பதுடன், கட்சி ஆதரவாளர்களுக்கும் கட்சிக்கும் இடையிலான நெருக்கத்தை அதிகரிப்பதற்காக நடைமுறைப்படுத்தப்படும் “வீட்டுக்கு வீடு மரம்” செயற்திட்டத்தையும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அனுராதபுரத்தில் ஆரம்பித்து வைத்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More