120
திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் நிறைவடைந்த நிலையில் புதிய திரைப்படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றன. இந்த அடிப்படையில் வரும் இரு வாரங்களில் மாத்திரம் 7 படங்கள் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பிரபுதேவா நடித்த ‘மெர்க்குரி’, புதுமுகங்கள் நடித்த ‘முந்தல்’ ஆகிய படங்கள் திரைக்கு வந்தன. அத்துடன் நேற்றைய தினம் விக்ரம் பிரபு நடித்த ‘பக்கா’, சாய்பல்லவி நடிப்பில் ‘தியா’, ‘பாடம்’ படங்கள் திரைக்கு வந்துள்ளன.
இதேவேளை எதிர்வரும் 4ஆம் திகதி கவுதம் கார்த்திக் நடித்த ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’, புதுமுகங்கள் நடிப்பில் ‘அலைபேசி’, ‘காத்திருப்போர் பட்டியல்’ முதலிய படங்கள் வெளிவரவுள்ளன.
அத்துடன் எதிர்வரும் மே மதம் 11ஆம் திகதி பிரபல நட்சத்திரங்கள் நடித்த 4 திரைப்படங்கள் வெளியாகின்றன. இதில் சாவித்ரியின் வாழ்க்கை படமான ‘நடிகையர் திலகம்’ மே 9ஆம் திகதியும் விஷால் நடித்துள்ள ‘இரும்புத்திரை’, அரவிந்த்சாமியின் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, அருள்நிதியின் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படங்கள் ஒரே தடவையில் வெளியாகின்றன.
Spread the love